புக்குளம் குட்டையில் கொட்டப்படும் கழிவுகள்


புக்குளம் குட்டையில் கொட்டப்படும் கழிவுகள்
x

புக்குளம் குட்டையில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பூர்

குடிமங்கலம்,

புக்குளம் குட்டையில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

குட்டை

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆறுகள், குளம், குட்டை தடுப்பணைகள் ஆகும். நீர் வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் குறைந்து கொண்டே வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது புக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உடுமலை செல்லும் ரோட்டின் அருகே குட்டை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது புக்குளம் குட்டை நிரம்பி காணப்படுகிறது. குட்டையில் நீர் நிரம்பியுள்ள நிலையில் குப்பைகள் குட்டையில் கொட்டப்பட்டதால் கழிவுநீர் போல் காட்சியளிக்கிறது.

நடவடிக்கை

குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கட்டிடக்கழிவுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் குட்டை கழிவு நீர்போல் காட்சியளிக்கிறது. குட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மழைக் காலங்களில் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் குட்டையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்டையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story