திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள்


திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள்
x

திறந்தவெளியில் அருப்புக்கோட்டையில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை டி.ஆர்.வி. நகர் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளை நாய்கள், மாடுகள் இழுத்துச் சென்று ஆங்காங்கே வீசி சென்று விடுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டாதவாறு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story