வடபொன்பரப்பி முஸ்குந்தா ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


வடபொன்பரப்பி  முஸ்குந்தா ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடபொன்பரப்பி முஸ்குந்தா ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

வடபொன்பரப்பி,

சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வடபொன்பரப்பி கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதற்காக, பிரம்மகுண்டம் செல்லும் சாலையில் மக்கும், மக்காத குப்பைகள் கொட்டுவதற்கு தனியாக இடம் உள்ளது. இங்கு தான் குப்பைகளை மொத்தமாக கொட்டி வருகின்றனர். ஆனால், சில பணியாளர்கள் குப்பைகளை அங்கு கொண்டு கொட்டாமல், முஸ்குந்தா ஆற்றில் கொட்டி வருகிறார்கள். அதாவது, அங்குள்ள ஆற்று பாலத்தில் குப்பை வண்டியை நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து ஆற்றுக்குள் குப்பைகளை அள்ளி போட்டு வருகிறார்கள். இதனால் ஆற்றுபடுகை சுகாதாரமின்றி கிடக்கிறது. தற்போது பெய்த மழையில் குப்பை கழிவுகள் முழுவதும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு வருகிறது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது எனவே, இதுபோன்று பொறுப்பற்ற முறையில் குப்பைகளை ஆற்றில் கொட்டும் பணியை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தி கொள்வதுடன், ஆற்று படுகையை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story