ஆற்காடு டெல்லி கேட் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்
ஆற்காடு டெல்லி கேட் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
ஆற்காடு டெல்லி கேட் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலை டெல்லி கேட் அருகே பாலாற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் அதனை தீ வைத்தும் கொளுத்துகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டு, நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story