போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்துள்ள குப்பைகள்


போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்துள்ள குப்பைகள்
x

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி மேலதேனூர் முதல் திருத்தோணிபுரம் வரை உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியில் வடி வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. மேலதேனூர் முதல் திருத்தோணிபுரம் வரை ரூ. 22 லட்சம் செலவில் இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. புழுகாபேட்டை என்ற இடத்தில் தூர்வாரும் பொழுது குடியிருப்பு வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டதால் தற்பொழுது அந்த இடத்தில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு

தூர்வாரும் பணியின் போது ஆற்றில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு இருந்த இளநீர் கூடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மண் ஆகியவை பொக்லின் எந்திரம் மூலம் எடுக்கப்பட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் பிரதான சாலையில் கொட்டப்பட்டு வருகிறது.கடந்த 3 நாட்களாக பிரதான சாலையில் கொட்டப்பட்ட மண், குப்பைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்ைட ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் சாலை ஓரம் கொட்டப்பட்ட குப்பை, மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறாா்கள். எனவே சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்ைபகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story