அம்பேத்கர் சிலைக்குஅ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு


அம்பேத்கர் சிலைக்குஅ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x

அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி செயலாளர் திருத்து சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story