கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிப்பு


கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிப்பு
x

தி.மு.க. வர்த்தக அணி சார்பில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆலங்காயம் ரோடு நகைக்கடை பஜாரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி அமைப்பாளர் பி.என்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் டி.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் சி.கே.சி.எஸ்.ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர் ராஜா ராணி என்.தாமோதரன் வரவேற்றார்.

மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மோகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கார்த்திக் கீதா, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story