காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர்

காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், பொன்.வாசுகிராம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story