நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு காய்கறிகளால் அலங்காரம்
கோவில்பட்டி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சுபா நகர் நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சுப்ரபாதம், 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துகிருஷ்ண பட்டாச்சார்யா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story