கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்


கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்
x

நீங்கள் உத்தரவிட்டும் எங்களின் கண்மாய்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கொண்டவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டரை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்


நீங்கள் உத்தரவிட்டும் எங்களின் கண்மாய்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கொண்டவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டரை முற்றுகையிட்டனர்.

போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடி, கொத்தங்குளம், பக்கிரி புதுக்குளம் பகுதிகளின் நீர்கமிட்டி தலைவர் ஷாஜகான், எக்ககுடி கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் தலைவர் சர்தாரி ஆகியோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வைகை அணை நிரம்பியதால் உபரிநீர் பல நாட்களாக ராமநாதபுரம் வந்தது. இந்த நீரை முறையாக திட்டமிட்டு கண்மாய்களுக்கு திருப்பி விட்டு நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகியது. பொதுப்பணித்துறையினரின் அலட்சிய போக்கால் வைகை தண்ணீர் பயனின்றி வீணாகிபோனது.

உத்தரவு

இவ்வாறு கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை வறண்டு கிடக்கும் எக்ககுடி கண்மாய்க்கு திருப்பி விட வேண்டும் என்றும் அதற்காக வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான உத்தரவினை கலெக்டர் பிறப்பித்தபோதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு இல்லை என்று பதில் அளித்துள்ளனர். இதுபோன்ற செயல்களுக்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பொதுப் பணித்துறை, வருவாய்த்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story