ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கோவிலில் கருடசேவை


ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கோவிலில் கருடசேவை
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கோவிலில் கருடசேவை நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் சுவாமி கோவிலில் உற்சவர் அவதார திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு பால் திருமஞ்சனம், 10.30 மணிக்கு உற்சவர் கள்ளா்பிரான் தாயார்களுடன் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

மாலை 6 மணிக்கு உற்சவர் கள்ளர் பிரான் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளினார். 7.30 மணிக்கு கருட வாகனம் வீதி உலா நடந்தது. விழாவில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story