திருவாரூர் புற வழிச்சாலையில் கருவாடு விற்பனை அமோகம்


திருவாரூர்  புற வழிச்சாலையில் கருவாடு விற்பனை அமோகம்
x

திருவாரூர் புறவழிச்சாலையில் கருவாடு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 1 கிலோ நெத்திலி கருவாடு ரூ.230-க்கு விற்பனையானது.

திருவாரூர்


திருவாரூர் புறவழிச்சாலையில் கருவாடு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 1 கிலோ நெத்திலி கருவாடு ரூ.230-க்கு விற்பனையானது.

கருவாடு

அசைவ பிரியர்கள் மீன்களுக்கு மாற்றாக விரும்பி உண்ணும் உணவுப் பொருள் கருவாடு. சந்தைகளில் கிடைக்க கூடிய பொருட்களில் கருவாடு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடலிலிருந்து பிடிக்கப்படும் மீன் தன்மையை இழந்து போகிற நிலையில் அவற்றை கருவாடாக மாற்று கின்றனர். அவ்வாறு மாற்றும் போது தேவையற்ற பாகங்களான குடல், தலை போன்றவற்றை அகற்றி விட்டு, நன்றாக அலசி உப்புடன் கலந்து சேர்ந்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர்.

விருப்பமான உணவு

தற்போது கடைகள், வணிக வளாகங்களில் கருவாடு கிடைத்தாலும் வியாபாரிகளிடம் கிடைக்கும் கருவாடின் சுவையும், மனமும் தனித்தன்மை வாய்ந்தது.

நகர்ப்புற மக்கள் கருவாட்டை பெரும்பாலும் விரும்புவதில்லை என்றாலும், கிராமத்து மக்கள் கருவாட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கிராமப்புறங்களில் பழைய கஞ்சிக்கு விருப்பமான தொடுகறி கருவாடு தான். பனை, தென்னை ஒலைகளை எரித்து( மண்எண்ணெய் ஊற்றாமல்) அந்த நெருப்பில் சாளை கருவாடுகளை சுட்டு சாப்பிடுவதை கிராமப்புற மக்கள் தற்போதும் வழக்கமாக கொண்டு உள்ளனா்.

விலை

திருவாரூரில் பல்வேறு இடங்களில் கருவாடு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிலோக்கணக்கில் சரக்கு வேன்களில் கருவாட்டை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். திருவாரூாில் சந்தை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் சாலையோரத்தில் கருவாட்டை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.

கருவாடுகள் 1 கிலோ ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. 1 கிலோ தோகை கருவாடு ரூ.150-க்கும், நெத்திலி ரூ.230-க்கும், ஓட்டாம்பாறை ரூ.200-க்கும், பன்னா ரூ.200-க்கும், முறைவா ரூ.250-க்கும் விற்பனையானது.

விற்பனை

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

திருவாரூரை சேர்ந்த நாங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடுவாடுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கருவாட்டில் மணத்துக்கு ஏற்றவாறு சுவை இருப்பதால் பெரும்பாலானோர் கருவாடை தற்பேதும் உணவில் சேர்ந்து வருகின்றனர். 1 கிலோ கருவாட்டை ரூ.100, ரூ.200 என்று விலையை குறைத்து விற்பனை செய்தாலும் ¼ கிலோ, ½ கிலோ என்று வாங்கி செல்கின்றனர். சிலர் ரூ.30, ரூ.20-க்கு சிறிதளவு கருவாடுகளை வாங்கி செல்கின்றனர். விலையை குறைத்து விற்பனை செய்தாலும் அதிக விலை என்று கூறி குறைந்த அளவிலேயே வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story