எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

அரியலூர்

அரியலூர்

அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story