எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், நாளை மறுநாள் 12-ந்தேதி(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு ஏஜெண்டுகளின் செயல்பாடுகள், எரிவாயு சிலிண்டர் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளையும் அனைத்து எரிவாயு நுகர்வோர் அமைப்பினர் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நேரில் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story