மதுரையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம்-தேர்வு செய்யப்பட்ட 41 பேருக்கு பயிற்சி


மதுரையில் கைதிகள் நடத்தும்  பெட்ரோல் விற்பனை நிலையம்-தேர்வு செய்யப்பட்ட 41 பேருக்கு பயிற்சி
x

மதுரையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 41 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை

மதுரையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 41 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கைதிகள்

மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தமிழக சிறைத்துறை இணைந்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை ப்ரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி கைதிகளுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. முதற்கட்டமாக இத்திட்டம் சென்னை புழல், வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

இரண்டாம் கட்டமாக மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மதுரையில் மத்திய சிறை வாளகம் முன்பு இந்த புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.

பயிற்சி

மேலும் இந்த பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் கைதிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரை மத்திய சிறையில் தேர்வு செய்யப்பட்ட 41 கைதிகளுக்கு களப்பயிற்சியும், பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்த பயிற்சி அளிக்கும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பயிற்சி வகுப்பு ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது.

அதில் மதுரை மத்திய சிறை டி.ஐ.ஜி.பழனி, சிறை சூப்பிரண்டு பரசுராமன் முன்னிலை வகித்தனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன் (ஓய்வு), மதுரை பிரிவு தலைமை அதிகாரி மகேஷ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு கைதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.


Next Story