கயத்தாறு தாலுகா அலுவலகத்தை தமிழ் புலிகள் இயக்கத்தினர்முற்றுகையிட்டு போராட்டம்


கயத்தாறு தாலுகா அலுவலகத்தை தமிழ் புலிகள் இயக்கத்தினர்முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு தாலுகா அலுவலகத்தை தமிழ் புலிகள் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகேயுள்ள 10 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கலுக்கு சுடுகாடு வசதி தரக்கோரி நேற்று தமிழ் புலிகள் இயக்கத்தினர் தாலுகா அலுவலகத்தை தீச்சட்டியுடன்முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

கயத்தாறில் தாலூகா அலுவலகத்தை நேற்று காலையில் திடீரென்ற தமிழ் புலிகள் இயக்கத்தினர் தீச்சட்டியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டசெயலாளர் வீரப்பெருமாள் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மனித நேய மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அஸ்மத், வில்லிசேரி கிளைச் செயலாளர் முருகேசன், வேல்முருகன், காலாங்கரைப்பட்டி காளிராஜ், மகேஷ், மூர்த்தீஸ்வரம். ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை

கயத்தாறு தாலூகா பகுதியிலுள்ள அய்யனார் ஊத்து, ஆத்திகுளம், திருமங்களக்குறிச்சி, பல்லாங்குளம், காளாம்பட்டி, வடக்கு இலந்தைகுளம், தாதம்பட்டி, கயத்தாறு இந்திராநகர், மூர்த்தீஸ்வரம், கலப்பைபட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாய மக்களுக்கு சுடுகாட்டில் எரிமேடை, காத்திருப்போர் அறை, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதியும் செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் நாகராஜிடம் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story