பொதுக்கூட்டம்


பொதுக்கூட்டம்
x

கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுக்கூட்டம் நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுக்கூட்டம் மேற்கு பகுதி தலைவர் முஹம்மது கனி தலைமையில் நடந்தது. எஸ்.டி.பி. ஐ. கட்சி மாவட்ட தலைவர் யாசர்கான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் துறாப் சைபுல்லா, எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் சாகுல்ஹமீது, அனைத்து ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் திப்புசுல்தான், மாவட்ட தலைவர் வக்கீல் லுக்மான் ஹக்கீம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, நேசனல் விமன்ஸ் பிரண்ட் மாநில செயலாளர் ஸல்மி, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முஹம்மத், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜாமுஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக வரலாற்று கண்காட்சி, விளையாட்டு போட்டி நடந்தது.


Next Story