விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள்


விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்கள்

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். வள்ளங்கள் அதிகாலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றில் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 20 விசைப்படகுகள் நேற்று காலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பின. இதில் ஒரு படகில் திரட்சி எனப்படும் 4 ராட்சத திருக்கை மீன்கள் சிக்கியிருந்தது. அவை தலா 700 கிலோ எடை கொண்டதாக இருந்தன.

இதனால் இந்த மீன்களை முழுமையாக துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டுவர முடியவில்லை. இதனால் மீனவர்கள் ராட்சத மீன்களை 4 துண்டாக வெட்டி ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்தனர். இந்த ராட்சத திருக்கை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றனர். இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கதாகும். இதேபோல் மற்ற விசைப்படகுகளில் புல்லன் வகை இறால், சூரை மீனகளும் ஏராளமாக கிடத்தன. இதனால், குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் நேற்று களைகட்டியது.


Next Story