மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி. அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுவிழா பள்ளி செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி தலைவி பிரியதர்ஷினி கவிராஜ், துணைத்தலைவி கார்த்திகா முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மகாலெட்சுமி வரவேற்று பேசினார். விழாவில் பிளஸ்-2 தேர்வில் உயிரியல் மற்றும் கணினி பயன்பாடு பாடத்தில் 100 மதிப்பெண் பெற செய்த ஆசிரியைகள் தனலெட்சுமி மற்றும் அகிலாண்டேசுவரி ஆகியோருக்கும் 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் முதுகலை ஆசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story