ரேஷன் கடை விற்பனையாளர்கள்- எடையாளர்களுக்கு பரிசு-சான்றிதழ்
ரேஷன் கடை விற்பனையாளர்கள்- எடையாளர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ஆர்.ஆர்.விற்பனையாளர் எஸ்.தனபால் முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், ஆலங்குடி தாலுகா, சிக்கப்பட்டி விற்பனையாளர் எஸ்.அமுதாவுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், திருமயம் சி.எம்.எஸ். எடையாளர் சி.ராமாயிக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், மீமிசல் எடையாளர் ஆர்.கண்ணகிக்கு 2-வது பரிசு 2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் கணேசன், கூட்டுறவு சரக துணைபதிவாளர் சு.சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story