மாணவர்களுக்கு பரிசு
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலைத்திருவிழாவை யொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலைத்திருவிழாவை யொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவைப்பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில் மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் (பொறுப்பு) சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பரிசு
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழாவையொட்டி நடந்த ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.