குலசேகரன்பட்டினத்தில் ஆடிகொடைவிழா:முத்தாரம்மன் கோவிலில் மாக்காப்பு தீபாராதனை


குலசேகரன்பட்டினத்தில் ஆடிகொடைவிழா:முத்தாரம்மன் கோவிலில் மாக்காப்பு தீபாராதனை
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாக்காப்பு தீபாராதனையுடன் ஆடிக்கொடைவிழா தொடங்கியது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா நேற்று இரவு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் ெசய்தனர்.

ஆடிகொடை விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாக்கிளில் ஆடி கொடை விழாவும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கொடைவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கோவில் கொடை விழா நேற்று இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. பகல் 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், பகல் 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெறும்.

அம்மன் மஞ்சள் நீராட்டு விழா

நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் காலை 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story