செஞ்சேரி சடையனார் கோவில் கும்பாபிஷேகம்


செஞ்சேரி சடையனார் கோவில் கும்பாபிஷேகம்
x

செஞ்சேரி சடையனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் சடையனார், பெரிய சுவாமி, ராஜா சுவாமி, சன்னாசி, சப்த கன்னிமார்கள், புதுகருப்பு, காசி முனி, எல்லை முத்துசுவாமி மற்றும் பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ள கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை கோவிலின் கோபுர கலசங்களுக்கும், சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செஞ்சேரி, எசனை, சொக்கநாதபுரம், சிறுவயலூர் புதூர், நல்லூர், தொண்டாமாந்துறை, நாவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த குடிபாடு அன்பர்கள் செய்திருந்தனர்.


Next Story