இளம்பெண் அடித்துக்கொலை; தற்கொலை நாடகமாடிய கணவர் கைது


இளம்பெண் அடித்துக்கொலை; தற்கொலை நாடகமாடிய கணவர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே இளம்பெண் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. தற்கொலை நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே இளம்பெண் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. தற்கொலை நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37), தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி முத்துமாரி (32). இவர் மூலம் 2 மகன்கள் உள்ளனர். இதேபோல் 2-வது மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். கருப்பசாமி இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி முத்துமாரி காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

மர்ம சாவு

அப்போது கருப்பசாமி தனது மனைவி முத்துமாரி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அதே நேரத்தில், முத்துமாரியின் தந்தை தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் திருப்பமாக முத்துமாரி உடலில் தாக்கப்பட்டதால் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சந்கேதத்தின் பேரில் முத்துமாரியின் கணவர் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முத்துமாரியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அதாவது, முத்துமாரி மகளிர் சுயஉதவிக்குழுவின் தலைவியாக இருந்துள்ளார். அந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, முத்துமாரியை தாக்கினார். காயம் அடைந்த முத்துமாரி 2 நாட்கள் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கணவர் கைது

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story