திராவகம் குடித்து சிறுமி தற்கொலை
மதுரை அருகே திராவகம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டாள்.
மதுரை
மதுரை,
மதுரை சிலைமான் அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவருடைய மகள் நாகேஸ்வரி (வயது 15). குடும்ப பிரச்சினை காரணமாக, பெற்றோர் நாகேஸ்வரியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு கழிவறைக்காக வைத்திருந்த திராவகத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story