தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே ஒறையூர் பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகள் சவுமியா (வயது 28). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த திருஞானம் என்பவருக்கு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சவுமியா நேற்று முன்தினம் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story