இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மானூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி முத்துலட்சுமி (வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. மேலும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி கடந்த 28-ந்தேதி மானூர் அருகே வடக்கு வாகைக்குளத்தில் உள்ள தனது தந்தை பரமசிவன் வீட்டுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் முத்துலட்சுமியின் பெற்றோர் தங்களது மருமகன் அய்யப்பன் வீட்டிற்கு சமரசம் பேச சென்றுள்ளனர். இந்த நிலையில் மனம் வெறுப்படைந்த முத்துலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சமரசம் பேசிவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் அங்கு தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்தார். நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.


Next Story