கிள்ளையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கிள்ளையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர்
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் நவீனா(வயது 24). இவருக்கும் கிள்ளை காமன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வகுமாருக்கும்(28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நவீனா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நவீனாவிற்கு, திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா? என சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story