திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் சாவு


திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் சாவு

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே புத்தமங்கலம் கிராமம் குடியான தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார். இவரது மனைவி சுவாதி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று மாலை சுவாதிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. உடனே குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக மணல்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவாதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுவாதியின் தாய் கிருஷ்ணகுமாரி (45) கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுவாதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story