மின்னல் தாக்கி பெண் சாவு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார்.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் ஊராட்சி பொன்னியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பையன். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று பகல் 2 மணி அளவில் கொசக்குடி கிராமம் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்தது. மழையின் போது மின்னல் தாக்கியதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story