மர்ம காய்ச்சலால் பெண் குழந்தை சாவு


மர்ம காய்ச்சலால் பெண் குழந்தை சாவு
x

ஜோலார்பேட்டையில் மர்ம காய்ச்சலால் பெண் குழந்தை இறந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே உள்ள பெரிய மோட்டூர் கிராமத்தை பரமாத்மா (வயது31). இவருக்கு கனிஷ்கா (3), யோகஸ்ரீ (10 மாதம்) ஆகிய 2 பெண்குழந்தைகள் உண்டு. யோகஸ்ரீக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் உடனடியாக வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காய்ச்சல் சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யோகஸ்ரீயை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு நேற்று கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தந்தை பரமாத்மா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story