சிறுமி கர்ப்பம்: போக்சோவில் வாலிபர் கைது


சிறுமி கர்ப்பம்: போக்சோவில் வாலிபர் கைது
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே மசினகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்துபோலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.


Next Story