பெண் குழந்தைகள் சுய மரியாதையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்


பெண் குழந்தைகள் சுய மரியாதையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் சுய மரியாதையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு அறிவுரை வழங்கினார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீலகிரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் அல்போன்ஸ் ராஜ் வரவேற்றார். இதில், கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு வனிதா, பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, தலைமை ஆசிரியைகள் அமீலியா, சகாயமேரி, ஜெப்ரி பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு வனிதா பேசுகையில், ஒழுக்கம் என்றாலே பெண்களுக்கு மட்டும் தான் என்ற மாயையான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் தவறு செய்தால் அதை யாரும் பெரிதாக பேசுவதில்லை. அதுவே பெண்கள் தவறு செய்தால் அவர்களுக்கு முத்திரை குத்தி விடும் நிலை தொடர்கிறது. எனவே பெண் குழந்தைகள் சுய மரியாதையுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் மற்றும் வளரின பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள், உதவி எண்கள் உள்ளன. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் சுசீலா சுரேஷ், ஜெயா மோகன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் நல குழும உறுப்பினர் மதன் நன்றி கூறினார்.


Next Story