மாணவிகளுக்கான கோ-கோ தேர்வு போட்டி


மாணவிகளுக்கான கோ-கோ தேர்வு போட்டி
x
தினத்தந்தி 7 Sept 2023 1:00 AM IST (Updated: 7 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மண்டல அளவிலான ஆண்களுக்கான கோகோ தேர்வுப் போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. அதே போல் பெண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த, 14 வயது பிரிவில் 97 பேர், 17 வயது பிரிவில் 56 பேர், 19 வயதுப் பிரிவில் 78 பேர் என மொத்தம் 231 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும், 9 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை தலைமையில் நடந்த தேர்வுப் போட்டியில், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணிக்கம், ராகவன், கோபி, மாதேஷ், பரிமளா, மரியசெல்வம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


Next Story