தின்னகோணம் பசுபதீஸ்வரர் கோவிலில் கோ பூஜை


தின்னகோணம் பசுபதீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
x

தின்னகோணம் பசுபதீஸ்வரர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.

திருச்சி

முசிறியை அடுத்த தின்னகோணத்தில் உள்ள பசுபதீஸ்வரர்-கோவிந்தவல்லி அம்பிகா கோவிலில் கோபூஜை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் அர்ச்சகர்களால் பிரகாரத்தில் வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பசுக்களுக்கு நெற்றியில் பொட்டு வைத்து, மாலை, சேலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள், கால்நடைமருத்துவர்கள் கோபி, கார்த்திக், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நோய் நொடி இல்லாமல் மக்கள் வாழ்ந்திடவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் இந்த பூஜை நடைபெற்றது. பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் ராமராஜ் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை பசுமை சிகரம் லோகநாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story