வரத்து அதிகரிப்பால் ஆடு கிலோ ரூ.450-க்கு விற்பனை


வரத்து அதிகரிப்பால் ஆடு கிலோ ரூ.450-க்கு விற்பனை
x

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகளின் வரத்து அதிகரிப்பால் ஆடு கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. கோழிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்தது.

திருப்பூர்

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகளின் வரத்து அதிகரிப்பால் ஆடு கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. கோழிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்தது.

குண்டடம் வாரச்சந்தை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சிஅடைந்ததால் ஆடு,கோழி வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வாங்கி விற்கும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் கூறியதாவது;-

சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

இந்நிலையில் ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும், இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும் என்பதாலும், இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் ரூ.4 ஆயிரத்து 500-க்கு விலைபோயுள்ளது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடு இந்த வாரம் ரூ.8ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது.

கோழிகள் விலை வீழ்ச்சி

அதேபோல் வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

அதேபோல் தரமான கருங்கால் பொன்றம், காகம், நூலான், வெள்ளைக்கால் வெள்ளை, கீறி, மயில், வல்லூறு ரகங்கள் வீரியத்துடன் சண்டை போடக்கூடிய சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சேவல்களை சண்டையிட்டு தேர்வு செய்து ரூ.3ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாங்கிச்சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story