கன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை


கன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை
x

கன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

கன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்கி செல்ல சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரத்தில் ரூ.7500-க்குவிற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து விவசாயிஒருவர் கூறியதாவது:-

மழை

கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story