புளுதியூர் சந்தையில் ரூ.33 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை


புளுதியூர் சந்தையில் ரூ.33 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு உள்ளிட்ட கால்நடைகளும், கோழிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்க மாநிலம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் ஒரு மாடு ரூ.8 ஆயிரத்து 600 முதல் ரூ.42 ஆயிரத்து 300 வரையும், ஒரு ஆடு ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்பனையாகின. மொத்தம் ரூ.33 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாகவியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story