உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் செத்தன.


உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் செத்தன.
x

உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் செத்தன.

திருப்பூர்

தளி

உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் செத்தன.

ஆடுகள் சாவு

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். அதனைச் சார்ந்த உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் விவசாயிகளை கைவிட்டாலும் கால்நடை வளர்ப்பு அவர்களுக்கு பெரிதளவில் உதவியாக உள்ளது. இந்தச் சூழலில் விவசாயிகள் வளர்த்து வருகின்ற ஆடுகள் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு கடித்து பலியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை பகுதியில் ஆடுகள் செத்துக்கிடந்தன. எனவே ஆடுகளை கடித்து கொன்றது வெளிநாய்களா? அல்லது சிறுத்தையா? புலியா? ஓநாய்களா? என விடை தெரியவில்லை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தியூர், சடையபாளையம், விளாமரத்துப்பட்டி பகுதியில் ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறப்பட்டு உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக எந்த ஒரு பொதுமக்களும் தகவல் தெரிவிக்கவில்லை.

பொதுமக்கள் அச்சம்

மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பாதிப்பிற்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வனத்துறையின் சார்பில் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்த சம்பவத்தை யொட்டி உடுமலை வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story