மழைக்காலத்தில் ஆடுகளை பராமரிக்கும் முறைகள்- வேளாண் விஞ்ஞானி விளக்கம்

மழைக்காலத்தில் ஆடுகளை பராமரிக்கும் முறைகள்- வேளாண் விஞ்ஞானி விளக்கம்
x

மழைக்காலத்தில் ஆடுகளை பராமரிக்கும் முறை குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை டாக்டருமான சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

மழைக்காலத்தில் ஆடுகளை பராமரிக்கும் முறை குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை டாக்டருமான சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் வாழ்வாதாரம்

திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஆடுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பருவ மழைக் காலத்தில் ஆடுகளின் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் ஆடுகள் இறப்பதை உரிய பராமரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம். ஆடு வளர்ப்பவர்கள் அனைவரும் தங்கள் கொட்டகையின் தூண்கள் உறுதியாக உள்ளதா? என்பதை மழைக்காலத்தின் போது சோதித்து பார்க்க வேண்டும். மேலும் ஆட்டு கொட்டகையின் கூரைகளை நல்ல முறையில் அமைக்க வேண்டும். கொட்டகைக்குள் மழைநீர் தேங்குவதை தவிர்க்க பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.

தீவனம்

மழைக்காலத்தில் சிறிதளவு பசும்புற்களையும், நன்கு பாதுகாக்கப்பட்ட தீவனங்களான வைக்கோல், கடலைக் கொடி மற்றும் தட்டைப் பயறு கொடி போன்றவற்றையும் தீவனமாக பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே ஆட்டு கொட்டகையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

அனைத்து தடுப்பூசிகளையும் மழைக்காலத்திற்கு முன்னரே போட்டு விட வேண்டும். மேலும் 'பி' காம்ப்ளெக்ஸ் டானிக்கை தினமும் 5 முதல் 10 மில்லி வரை கொடுப்பதன் மூலம் ஆடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

மழைக்காலத்தில் ஆடுகளை பராமரிக்கும் முறை குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானியும், கால்நடை டாக்டருமான சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு கோமாரி நோயினால் ஆடுகள் அதிகம் இறந்து உள்ளன. எனவே அதற்கான தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்வது நல்லது.

எந்த தடுப்பூசியும் போடாதவர்கள் பி.பி.ஆர். மற்றும் துள்ளுமாறி நோய்க்கான தடுப்பூசிகளை முதன்மையாக செலுத்தி கொள்வது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story