போச்சம்பள்ளி ஞாயிறு சந்தையில் ஆடு விலை உயர்வு
போச்சம்பள்ளி ஞாயிறு சந்தையில் ஆடு விலை உயர்வு
கிருஷ்ணகிரி
மத்தூர்:
போச்சம்பள்ளியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையானது ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் கிடைக்கும் இந்த வாரச்சந்தையில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை சூடுபிடித்தது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் திரண்டு வந்து ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் சுமார் 3000 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்ற நிலையில் இந்த வாரம் விலை கடுமையாக உயர்ந்து 5,000 முதல் 8000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் உப தொழிலாக ஆடுகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story