ஆடுகள் திருட்டு


ஆடுகள் திருட்டு
x

சிவகாசி பகுதியில் ஆடுகளை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்குபகுதியை சேர்ந்தவர் தங்கமணி மகன் கார்த்திக் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த முனியசாமி மகன் தங்கபாண்டி (22) என்பவர் ஒரு ஆட்டினை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரைணை நடத்தி தங்கபாண்டியை கைது செய்தனர். இதேபோல் சிவகாசி ராணி அண்ணா காலனியை சேர்ந்த சோலையப்பன் (50) என்பவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டினை திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். இதுகுறித்து சோலையப்பன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story