காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது
காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலை அருகே மேய்ச்சலுக்காக தனது ஆடுகளோடு தங்கியிருந்தார். சம்பவத்தன்று காரில் வந்த ஒரு கும்பல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு தப்பினர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சிவசாமி குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குன்றக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கமிலா பானு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் ஆட்டை திருடியது காரைக்குடி காட்டு தலைவாசலை சேர்ந்த காசி முகமது (வயது 40), காரியாபட்டி செல்வகுமார் (31), காரைக்குடி பருப்பூரணி நவநீதகிருஷ்ணன் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆடும் மீட்கப்பட்டது. மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.