ஆடு திருடியவர் கைது


ஆடு திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த சண்முகம் மகன் பாலமுருகன். இவர் மாங்குடியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் 70 ஆடுகள் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு திரும்பவும் கொட்டகைக்கு சென்றபோது ஒரு ஆடு குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பாலமுருகன், கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் இடையங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மனோஜ் குமார் (23) என்பவர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story