ஆடு திருடியவர் கைது


ஆடு திருடியவர் கைது
x

ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்தவர் லெட்சுமணன், விவசாயி. இவர் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே இருந்த கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே நேற்று வெட்டன் விடுதி சந்தை பகுதியில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வேளாங்கன்னி பூக்காரத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்பதும், பொன்னன் விடுதியில் காணாமல் போன 3 ஆடுகளை அவர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story