100 பயனாளிகளுக்கு ஆடுகள்
100 பயனாளிகளுக்கு ஆடுகளை அசோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிவகாசியில் 100 பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி சாரதாநகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் கலந்து கொண்டு சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள, விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்கள் என 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் தலைவர் முத்து லட்சுமி விவேகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்மத்துரை, பைபாஸ் வைரகுமார், ரவிசங்கர், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசால் வழங்கப்பட் டுள்ள இந்த ஆடுகள் 2 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. நன்கு பராமரித்து வளர்த்து ஆடுகளை பெருக்கி பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.