பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கடலூர்

ராமநத்தம்,

வாரச்சந்தை

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு கடலூர் மற்றும் அதனையொட்டியுள்ள கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடு, கொடியாடு போன்ற ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவாா்கள். அவ்வாறு வரும் ஆடுகளை கடலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்பட 25-க்கும் மேற்பட்ட நகரங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் நேரில் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இதுதவிர ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நேற்று நடந்த வாரச்சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த ஆடுகளை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த மொத்த வியாபாரிகள் ஆடுகளுக்கு விலை நிர்ணயம் செய்து, போட்டி போட்டு வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நேற்று நடந்த வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.


Next Story