புதியம்புத்தூர் சந்தையில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை


புதியம்புத்தூர் சந்தையில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி புதியம்புத்தூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

பொங்கல் பண்டிகையையொட்டி புதியம்புத்தூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டு சந்தை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் வியாழக்கிழமை தோறும் வார ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு வல்லநாடு, தெய்வச்செயல்புரம், பேட்மாநகரம், பசுவந்தனை, எப்போதும்வென்றான், மணியாச்சி உள்பட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

ரூ.1½ கோடிக்கு விற்பனை

இதை வாங்குவதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கயத்தாறிலும் வாரச்சந்தை நடைபெற்றது. இங்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது.


Next Story