மோர்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் ரூ.3 கோடிக்கு விற்பனை


மோர்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் ரூ.3 கோடிக்கு விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 4:41 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மோர்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் ரூ.3 கோடிக்கு விற்பனை ஆனது.

நாமக்கல்

திருச்செங்கோடு

கால்நடை சந்தை

திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் நேற்று வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்க மோர் பாளையம் கால்நடை சந்தையில் குவிந்தனர். நாட்டுவெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, முணா வெள்ளாட்டு வகைகளும், நாட்டு செம்மறியாடு துவரம் செம்மறி போன்ற ஆடுகள் விற்பனைக்குவந்தன.

இதில் செம்மறி ஆடுகளே அதிகம் விற்கப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. இந்த ஆடுகளை சேலம், நாமக்கல், பள்ளப்பட்டி, புதுக்கோட்டை, கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனர்.

ரூ.3 கோடிக்கு விற்பனை

இது குறித்து ராசிபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

92 கிலோ எடை கொண்ட போயர் ஆட்டுவகை மற்றும் 72 கிலோ எடை கொண்ட ஆடும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என்றும் 2 ஆடுகள் ரூ.68 ஆயிரத்திற்கு மட்டும் விற்பனையாகின. மேலும் பக்ரீத் பண்டிகையையொட்டி 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மோர் பாளையம் கால்நடை சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் என வியாபாரிகள் வந்துள்ளனர்.

வழக்கமாக ஒரு கோடி ரூபாய் வரை இங்கு வியாபாரம் நடக்கும். பக்ரீத் பண்டிகை என்பதால் ரூ.3 கோடி வரை வியாபாரம் நடைபெற்று உள்ளது. வழக்கத்தை விட விலையும், கூட்டமும் அதிகமாக உள்ளது என அவா் கூறினார்.


Next Story