கோபி சிறையில் 2 கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்
கோபி சிறையில் 2 கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவதாக கோவை மத்திய சிறை உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து கோவை மத்திய சிறை உளவு பிரிவு போலீசார் மற்றும் கோபி சிறை போலீசார் ஆகியோர் கோபி சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் இருக்கும் அறைகளில் ஒவ்வொன்றாக சென்று போலீசார் சோதனையிட்டனர். சோதனையின்போது கோபியை சேர்ந்த கவுதம் (வயது 29), கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம் காா்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்ேபாது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபி போலீசில் மாவட்ட சிறை சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.